8.26.2010

2010 இரண்டாம் பதிவு

நான் இந்த பக்கம் வரதே இல்லை. நான் ஏன் இப்படி எதுக்கும் நேரம் ஒதுக்காம இருக்கேன் ன்னு எனக்கே புரியல. தமிழ் எழுத கூட மறந்து போச்சி. கேவலம். தமிழ் ல எழுத லேன்னா, என் பெரிய பலம் போயிடும்.


சரி ஒளர ஆரம்பிக்க போரின். கெட் ரெடி!!!

நான் ரொம்ப நாள்  எழுத நினைத்த ஒன்று. செல் போன் / கைபேசி இல்லாமல் இருக்கறதா எதோ அசிங்கமா பார்க்கறாங்க. ஒன்னு சொல்லிக்கணும், இத்தனை நாள் என் கிட்ட கை பேசி இல்ல. இப்போ தான் வாங்கி கொடுத்தாரு என் கணவர். அதுவும் ரொம்ப வர்புருத்தி.
ஆனாலும் நம்ப ரொம்ப விவரம் இல்ல. இதுவரைக்கும் மூன்று பேருக்கு தான் நம்பர் கொடுத்திருக்கேன். ஏனோ பிடிக்கல கை பேசி பயன் படுத்த.

அதுக்கு ன்னு எனக்கு டெக்னாலஜி தெரியாது ன்னு நினைக்க வேண்டாம். நான் இன்ஜினியரிங் ல ப்ராஜெக்ட் பன்னதே கைபேசி ல தான்.

என் கணவரும், என் பையனும், சிங்கம் படம் பார்க்கறாங்க. நான் ஏற்கனவே இரண்டு தடவ பார்த்தாச்சி. பொய் அவுங்கள DISTURB பண்ணி தூங்க கூட்டி ன்னு போகணும். ஸ்கூல், ஆபீஸ் க்கு கிளம்ப மாட்றாங்க  காலைல சீக்கிரம். அவுங்கள கிளப்புறது குள்ள எனக்கு bp வந்திரும் போல.

ஒகே   தனியா  புலம்ப கஷ்டமா இருக்கு. யாராச்சும் இத படிச்சீங்க ன்னா, உங்க எண்ணத்தையும் சொல்ல லாமே.

4.30.2009

தமிழ் மக்கள் - ஸ்ரீ லங்கா

தேர்தல் நேரம் பார்த்து வாய தொரக்குதே பொண்ணு, தேர்தல் ல எதாச்சும் நிக்குது போல ன்னு நினைச்சிக் காதீங்க. எனக்கு இத்தனை நாள் நம்பிக்கை இருந்திச்சி, கண்டிப்பா தமிழ் மக்கள் க்கு ன்னு ஒரு போராளி படை இருக்கும் ன்னு. இப்போ அது பயங்கர பின்னடைவு அடைந்து இருக்கிறது, என் நம்பிக்கை ய கொஞ்சம் அசைக்குது.

ரெண்டு மாசத்துல 6400 தமிழ் மக்கள் கொள்ள பற்றுக்காங்க. அவுங்க இறந்த துல யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி.
ரெண்டு படைகளும் இதை உணர மாட்றாங்க. முன்னேறி போகணும் ன்னு ஒரு படை யும் , கை la இருக்கரத விற்ற கூடாது ன்னு இன்னொரு படை யும். அப்பாவி மக்களை பலி கொடுக்க றாங்க.

இந்த பிரச்சனை க்கு என்ன தான் தீர்வு?

அவுங்க அவுங்க அவுங்க வேலை ய பார்க்கணும்.
எல்லா மக்களையும் சரி சமமா நடத்தனும்.
சொல்றது சுலபம் நாளும் .. செய்கிறது ஒன்னும் கஷ்டமில்லை.

11.18.2008

தூக்கம் வராமல்...

12-12-2008 0.50 a.m
இன்னைக்கு இல்லை நேற்று இரண்டு முறை எழுத எண்ணி பின் எழுத வார்த்தைகள் கிடைக்காமல் நிறுத்தினேன். மனதில் எதோ பெரிய/சிறிய விஷயம்/சம்பவங்கள் அடைதிருக்குமாயின், என் பேனா நுனி வழியே இறக்கி விடுவது அல்லது என் விரல் நுனிகளால் கீ-போர்டு வழியாக இறக்கி விடுவது என் வழக்கம். என்னால் என்னை இந்த இரண்டு வகையாலும், முழுமையாக உணர முடிகிறது, என் உள்ளத்துள் உள்ளதும் வெளி கொணர முடிகிறது. ஏனோ பேச்சு வழக்கில், இன்னும் அந்த வெளிகொனறல் வரவில்லை இன்னும். மிகவும் முயற்சித்து கொண்டு வரும் செயல்களில் இதுவும் ஒன்று.

சொல்ல வருவது என்ன வென்றால், அதற்க்கு முன் -என் கைஎழுத்து இன்று அழகாக இருக்கிறது. எழுதும் போதே ரசிக்கிறேன். மற்றொன்று மிகவும் வேகமாக எழுத முடிகிறது-மடை திறந்த வெள்ளம் போல்-சில வரிகளில் கோட்டில் வார்த்தைகள் தங்குகின்றன, சில வரிகளில், வார்த்தைகள் கோட்டில் தொங்கி ஊஞ்சல் ஆடுகிறது-என் மனம் போல். .....

சரி இதுக்கு மேல் இழுக்க விரும்பவில்லை..என் தேர்வு விடைத்தாளில் உள்ளது போல்...

நேற்று மதியம் நான் வலை பூக்களில் தாவி கொண்டிருக்கையில் , ஒரு கட்டுரை படிதேஅன். அது, ஒரு வெளி நாட்டில் வாழும் இந்தியத் தாய், தன் குழந்தைக்கு தன் தாய்மொழியை சொல்லி கொடுக்கிறாள். அந்த கட்டுரை அவள் ஆரம்பிக்கையில், தன் குழந்தைக்கு தாய் மொழி கற்று தர அவள் எடுத்து கொண்ட முயற்சிகள் பற்றியும், அந்த வகுப்புகள் பற்றியும் ரசிக்கும் படியாக எழுதி இருந்தார். அந்த கட்டுரை யை அவர் முடித்த விதம் தான் என்னை ஸ்தம்பிக்க வைத்து. அந்த குழந்தை தாய் மொழியை நன்றாக கற்றுகொண்டதாகவும், தாய் மொழியில்,

" சாவு என்றால் என்ன?"

" நான், நீ, எல்லோரும் சாவோமா?" என்று கேள்வி கேஅட்பதகவும், தன் தாய் மொழியில் அதற்க்கு பதில் சொல்ல தெரியவில்லை என்றும் முடித்திருந்தார் அந்த கட்டுரை யை. இந்த கட்டுரை படித்து, எழுத எண்ணி, ஒன்றும் எழுத முடியாமல் எழுந்தேன்.

மற்றொரு முறை எழுத நினைத்து மிகவும் வருத்தமானது...

இன்று தற்செயலாக செய்திகள் பார்கையில், சட்ட கல்லூரி மாணவர்கள் அடிதடி, என்று பாத்து நிமிடம் அந்த " அடிதடி" யை காட்டினார்கள். உங்கள் மனம் கல் என்றால், நீங்கள் அந்த கோப்பு கட்சியை எதிலாவது தேடி கண்டு பிடித்து பாருங்கள். ஒரு மாணவனை கட்டைகளால், இரும்பால் பாத்து பேர் மாறி மாறி அடிக்கிறார்கள்n, அவன் அசையாமல் படுத்திருக்கிறான்-வலி பொறுக்காமல். ஏறக்குறைய சேத பம்பை அடிப்பது போல தான். அத்தனை அடி அவனுக்கு-அந்த ரோவ்டிகள்/மாணவர்கள்/வக்கீல்களிடம் இருந்து . அதை விட கொடுமை அதை போலீஸ் வேடிக்கை பார்ப்பதும், செமேற மண் அதை படமாக்கி கொண்டிருப்பதும்...பொல்லாத உலகமடா என்று நினைக்க வைத்த கட்சிகள் அவை...

இது போதும், நான் இன்று நிறையா பெசிவிட்டேஅன். என் பேனா மெதுவாக ஓடுகிறது, மூச்சு வாங்கு கிறது போலும், பிறகு சந்திப்போம். ......

1. 20.a.m





10.23.2008

காட்டு வழி பாதை

தனியே போகுது பாதை
பாதையில் தனியே நான்...
நிழலே இல்லை இங்கே
நிஜமே எப்போதும்!

போதும் இந்த 4 வரி.

10.15.2008

பிரெஞ்சு கதை சொல்லும் இயற்கை

பிரெஞ்சு கதை சொல்லும் இயற்கை
இயற்கை கதை பேசுவதை படம் எடுத்திருக்கும் என் கணவர்க்கு பாராட்டுக்கள்.

Picture 035 copy

அந்த கல்யாண பொண்ணு கடந்து வந்திருக்க ஒல்லியான மரம் சொல்லுது:
"எங்க கல்யாணம் எல்லாம் அலங்காரம் இல்லாத, மழை வந்து ஆசிர்வதிக்கும் கல்யாணம். "
------------------------------------------------------------------------------------
Picture 135 copy

அந்த ஒல்லியான மரங்கள், தூரமா போகும் கார் ஐ பார்த்து சொல்லுது:
"உங்கள மாதிரி கனமான மனிதர்களை நாங்கள் சுமக்க தேவை இல்லை. இந்த இலகுவான கொடிகளை தான் சுமக்க வேண்டி இருக்கும். "
------------------------------------------------------------------------------------
Picture 158 copy

உடைந்து போன பாலம், அடுத்த படத்தில் இருக்கும் பாலத்தை பார்த்து:
"உன்னை போல என்னால உபயோகமா இருக்க முடியலையே "

------------------------------------------------------------------------------------
Picture 159 copy

இயங்கும் பாலம், உடைந்த பாலத்தை பார்த்து:
"நீ என்னை போல் சுமை தங்க தேவை இல்லை."
------------------------------------------------------------------------------------
Picture 163 copy

ஏன் இவ்ளோ வெக்க படர..இத்தனை வருஷம் ஆகியும் உன் வெக்கம் தான் என்னை எதோ பண்ணுது.

------------------------------------------------------------------------------------
Picture 181 copy

ஆள் தப்பி இருக்கும், (find the odd man out) அதை கண்டு பிடிச்சி, அதுக்கு ஒரு டயலாக் சொல்லுங்க யாராச்சும்?
------------------------------------------------------------------------------------
Picture 192 copy

இன்னும் கொஞ்ச நாள் ல நாமும் நம்ம முன்னோர்கள கீழப்போய் சிந்திப்போம். இந்த மனிதர்கள் தான் அவுங்க முன்னோர்களை மேல ப்போய் சந்திப்பார்கள்.
------------------------------------------------------------------------------------
Picture 225 copy

{நான் மீதிய அப்புறம் எழுதறேன்...கொஞ்சம் வேலை இருக்குது}
------------------------------------------------------------------------------------
Picture 368 copy
------------------------------------------------------------------------------------
Picture 369 copy
------------------------------------------------------------------------------------
Picture 372 copy