1.13.2008

இடையில் மாட்டி கொண்டு

சிந்தனைக்கும் செயலுக்கும் இடையில் மாட்டி கொண்டு தவிக்கும் நான்

சிந்திக்காமல் இருக்கையில் ஜடம் ஆகிறேன்.

செயல்படாமல் இருக்கையிலும் ஜடம் ஆகிறேன்.

- இப்படிக்கு பாதி ஜடம் .

கேள்வி

கடவுளை காண நேர்ந்தால் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்?

நான்: இத்தனை நாள் நான் உங்களிடத்தில் வேண்டியது தெரியுமா?

கடவுள்: தெரியும்

நான்:பின் ஏன் நான் வேண்டியது எதுவும் நடக்க வில்லை

கடவுள்:நீ இன்று என்னை கண்டு இந்த கேள்வி கேட்க

கூடார வள்ளி

கூடார வள்ளி...ஆண்டாள் திருமணம்.மார்கழி மாதத்தில் கொண்டாட படுகின்றது. 27 ஆவது பாசுரம் அம்பாவடை வரும் நாளில் கொண்டாட படுகின்றது. இதை பற்றி தெரிந்தவர்கள் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

1.10.2008

அழைப்பு

இந்த வலை பூ வில் உங்கள் எழுத்துக்களை யும் பதிக்க விரும்பினால் எனக்கு மெயில் அனுப்பவும்.

lavraj2k4@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். சுப்ஜெச்ட் ல் அமுத தமிழ் என்று குறிப்பிடவும்.

புத்தகம்,கவிதைகள்,சினிமா என்று தமிழ் சம்பந்த பட்ட எதையும் விமர்சிக்க ஆவல் இருப்பின் அதையும் எனக்கு மெயில் ல் அனுபலாம். ஆங்கில வடிவான தமிழில் அனுபினாலும் மகிழ்ச்சி.

விரைகிறேன்

இன்றைக்கும் நாளைக்கும் வேற்றுமை கற்பிக்க விரைகிறேன் நாளை என்னால் விரையாமல் போக வைக்க போகும் முதுமை யை நினைத்து விரைகிறேன் என்றும் இளமையுடன் இருக்க விரைகிறேன் முதுமையில் எதையும் இழக்கவில்லை என்ற சமாதானம் கற்பிக்க விரகிறேன் । நான் விரையும் வேகத்தில் உங்களிடும் சொல்ல நினைத்த வார்த்தைகள் நீங்களும் விரையுங்கள் உங்களை நேரம் இருந்தால் சந்திக்கிறேன் .

-லாவண்யா

1.06.2008

கவிதை

என் மேல் ஏன் இந்த கோவம் உனக்குள்ளே தானே கர்த்து கொண்டு இருந்தேன்
என்னை ஏன் உணரவில்லை இப்பொழுது ஏன் என்னை விடாமல் விரட்டுகிறாய் ..
என் கவிதைகள் என்னிடம் கேட்ட கேள்விகள்।


பதில் :

உன் அருமை தேடி ஓடி வந்தேன் என்னை ஏற்று கொள் சுவைக்க இடம் கொடு மறக்காமல் மன்னித்து விடு ....காதுகொடு இருகிறேன் மான்னிப்பு க்காவும் உன்னை படைப்பதர்காகவும்.

-லாவண்யா