2.27.2008

எழுத்தாளர் சுஜாதா (A Tribute To Writer Sujatha)


எழுத்தாளர் சுஜாதா வை எனக்கு முதலில் அறிமுகபடுதியது அவரது "24 ரூபாய் தீவு " நாவல். ஏனோ தெரியவில்லை அந்த நாவல் லை இரு முறை தொடர்ந்து வாசித்தேன். கண்டிப்பாக புரியவில்லை என்பதற்காக அல்ல.
அவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரின் விஞ்ஞானச் சிறு கதைகள், ஸ்ரீ ரங்கத்து கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவரின் எழுத்துக்கள் எப்போதும் நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும்..நாம் வாசிக்கும் போதெல்லாம் சுவாசித்து கொண்டு இருக்கும்.
அவரின் நூல்கள் வரும் generation அயும் கவரும்..அவர்களையும் எழுத்துலகிற்கு கொண்டு வரும்.

சுஜாதா எனும் ரங்கராஜன் என் Role Model.

அவரிடம் இருந்து நான் கற்றது.. விழித்து கொண்டே இருக்க..கற்று கொண்டே இருக்க..கவனித்து கொண்டே இருக்க..வாசித்து கொண்டே இருக்க..எழுதி கொண்டே இருக்க..எழுத்தில் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்க.

வருத்தத்துடன் லாவண்யா Let his soul Rest in Peace. My Deep Condolences to the family.
http://www.writersujatha.com/




2.21.2008

படிச்சு என்ன கிழிச்சோம்-1


எங்க அபார்ட்மென்ட் ல இருக்கற பசங்க கூட என்ன ஆன்டி ன்னு தான் கூபிடறாங்க. ஆனா இந்த பூ விக்கற பசங்க எவ்ளோ அழகா அக்கா ன்னு கூபிடறாங்க.


பூ விக்கற பய்யன் அல்லது பொண்ணு கிட்ட பேச்சு கொடுத்து இருக்கீங்களா?
அவுங்க எல்லாரும் செய்யற வேலையை அலட்டிகாம செய்யறாங்க ன்னு நான் பார்த்து நிறையா தடவை ஆச்சர்ய பட்டு இருக்கேன்.


இப்போ பப்ளிக் எக்ஸாம் வரபோகுது. 12th க்கு மார்ச் 3 ஆம் தேதியும், 10th க்கு மார்ச் 27 ஆம் தேதியும் எக்ஸாம் தொடங்க போகிறது.


நான் பார்த்த பூ விற்கும் பசங்க 10th படிக்கற பசங்க. அவுங்க படிக்காம இப்படி வேலை செய்யரத பார்த்தா எனக்கு பயமா இருக்கு.

ஏன்னா என்ன அந்த அளவுக்கு பயம் காட்டி இருந்திருக்காங்க என் அம்மா அப்பா.


எக்ஸாம் க்கு மூன்று மாசம் முந்தியே டிவி பரனை க்கு ஷிபிட் ஆயிடுத்து.அப்பயும் நம்ம கில்லாடி இல்ல..விடுவோமா..பக்கத்து வீட்டு டிவி ல இருந்து வர்ற ஆடியோ மட்டும் கேட்டு கிட்டு இருப்பேன்(புக் திறந்தபடி கை யில் இருக்கும்).


அந்த ரெண்டு பசங்க கிட்டயும் நல்ல படிங்க..அலட்சிய படுத்தாதீங்க ன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். பாக்கலாம்.. என்ன மார்க் எடுக்கறாங்க ன்னு.

அன்னைக்கு அப்பாவி போல் அ,ஆ படிச்சோமே அது தான் மனதில் இன்றும் இருக்கும் படிப்பு. மத்தவுங்க ல போல நாமளும் டாக்டர், engineer அகனும்ன்னு படிச்சதுல எனக்கு ஒண்ணும் நினைவு ல இல்ல..உங்களுக்கு?
image from southrange.com

2.18.2008

தமிழ் M.A


தமிழ் M.A
ஆங்கிலத்தில் பெயர் இருந்தால் படத்திற்கு மானியம் கிடையாது என்பதற்காக கற்றது தமிழ் என்று படத்தை மாற்றி இருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது என்று தலையில் அடித்து கொள்ள தோன்றுகிறது.


இந்த படம் காதல் படமா, கருத்து சொல்ல வந்த படமா, இயக்குனரின் படமா, பாருங்க இந்த உலகத்தை,மனிதர்களை என்று நமக்கு போட்டு காட்டும் படமா என்று தெரியவில்லை. ஏனெனில் நான் மேல் குறிப்பிட்ட எல்லாத்தையும் தழுவி இருக்கிறது இந்த கற்றது தமிழ்.


பாராட்ட பட வேண்டிய விஷயங்கள்:

* இசை

* தமிழ் மட்டும் படிச்சா என்ன ஆகும் என்று உணர்த்திய இயக்குனர்க்கு

* அருமையான காதல் பின்னணியில் கதை ஓடுவது

* அழகம் பெருமாள் நடிப்பு

* அழகான நடிகை


வெறுப்பு ஏற்றிய விஷயங்கள்:

* கால் போன போக்கில் கதை வளைந்து ஓடிய இடங்கள்

* நிஜமா தான் சொல்றியா ன்னு படத்தின் பிர்பாதியிலும் கேட்டு கொண்டு இருக்கும் நடிகை.


என் கை தட்டிய இடங்கள்:

*கருணாஸ் காமெடி

*சுடு தண்ணி குடிக்கும் காட்சி

image courtesy: www.behindwoods.com

காதல் படுத்திய பாடு கொஞ்சம் இல்லை

விடை பிரிய மனம் இல்லாமல் போனாலும்...
விடை பிரிய என்னும் காதல் மனது...

இனிமையான பாடல்களை உதடு மட்டும் பாடி கொண்டே இருக்கும்
நீ மனதில் பிம்பமாய் ஆட
என்னை பார்பவர்களுக்கு கேலி கூத்து போல் இருக்கும்.

என் பலம்

நான் என்னை புரிந்து கொண்டு இருப்பதும்
இன்னும் என்னை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் தான்
என் பலம்.

2.14.2008

காதலில் கரைவது போல்!


நாட்கள் வருடங்களில் மறைந்திருக்கலாம்

நொடிகள் நிமிடத்திற்குள் கரைந்து விடலாம்

நான் உன்னுள் மறைந்து உன் காதலில் கரைவது போல்!



என் உடலில் ஓடும் குருதியை போல் உன் நினைவும் என்னுள் ஓடி கொண்டே தான் இருக்கிறது!இதற்க்கு மேல் என்ன சொல்ல


-உன் லாவண்யா

2.05.2008

உனக்காக - 2 (பூ)

வலை தளங்களில் உனக்கு கொடுக்க பூக்களை தேடினேன்.

கிடைக்கவில்லை உன் ரசனைக்கு ஏற்ற பூ

உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறது போல அந்த பூ!

உனக்காக-1

வித்யாசமாய் தெரிகிறது இந்த பூமி...நான் உன்னை கண்ட தாலோ !

கவித்துவமாய் இருக்கின்றன என் எழுத்துக்கள் உன் மேல் காதல் வய பட்ட தினலோ !

நினைத்து கொண்டே தான் இருந்தேன்..ஒரு நொடி உன்னை மறக்க நினைத்தாலும் என்னால் முடியாமல் போயிற்று.

மீண்டும் உன்னை பற்றி நினைத்து கொண்டே தான் இருக்கிறேன்.

கவிதை எழுத கூட முடியாமல் உன்னை நினைத்து கொண்டு இருந்ததை இன்று தான் என்னால் பதிவு செய்ய முடிகிறது.
பழகிவிட்டேன் போலும் உன்னை நினைத்து கொண்டே எழுதுவதற்கு.

2.04.2008

தலைப்பு கொடுப்பது அவசியமா மனதின் சிந்தனைக்கு

கவிதை எழுதும் பழக்கம் என்னிடம் இன்னும் இருக்கிறது என்று எனக்கு நானே நிருபீத்துகொள்ள வேண்டி இருக்கிறது என்ன செய்ய.

ஒரு விஷயம்..நம்மை நாமே நம்பாமல் இருக்க கூடாது..

சுமக்க முடியாத பாரத்தை சுமப்பது பள்ளி பிள்ளைகள் மட்டும் இல்லை..வயோதிக பிட்சை காரர்களும் தான்.
நான் இன்று கண்ட அந்த முதியவர்க்கு அறுபது வயது தாண்டி இருக்கும்..ஆனாலும் பிழைப்புகாக மூட்டை மூட்டை யாய் குப்பை களை சுமந்து போகிறார்.

கவிதை:

பார்த்த நிமிடம் தெரிய வில்லை உன்னை பற்றி!

நீ என்னிடம் சேர்ந்த நிமிடம் உணரவில்லை உன்னை பற்றி!

நீ கேள்வி கேட்ட தருணம் நான் மறந்தேன் உன்னை!

நீ இறக்கையில் என்னை உன்னிடம் வைத்தா எரிப்பார்கள்?

என்று கேட்டாயே.

ஆம் பணம் என்னை பார்த்து கேட்டது.

கல்லூரி.....விமர்சனம்


சமீபத்தில் கண்ட திரைப் படங்களை பற்றி விமர்சிக்க எனக்கு ஏன் அப்படி ஒரு ஈடுபாடு என்று புரியவில்லை. ஒரு வேலை..நான் பள்ளியில், கல்லூரியில் நண்பர்களிடம் திரைபடங்களை பற்றி பேசியதினாலும் இப்பொழுது அதுக்கு ஒரு வழியும் இல்லாமல் போனதினாலும் நான் இந்த திரைப்பட விமர்சகி பதவி எடுத்து கொண்டு இருக்கலாம்.

தலைப்பிற்கு வருகையில்..கல்லூரி.....இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றி அடையாமல் போனதற்கு நான் கருதும் காரணம்...கிளைமாக்ஸ் ல் அழுகை வரவில்லை என்ற காரணம் தான்.என்னால் படத்தில் ஒன்ற முடிந்தது. ஆனால் கிளைமாக்ஸ் என்னை காம்ப்ரமைஸ் பண்ணவில்லை என்பது தான் இந்த படத்தின் மைனஸ் என்று நான் கருதுகிறேன்.


என்னை ஈர்த்த காட்சிகள் ...தமன்னா ஹீரோ வை தேடி அவன் வீட்டிற்க்கு வந்து போன காட்சி. தமன்னா மற்றும் ஹீரோ விற்கு காதல் வரும் விதத்தை கட்டிய காட்சிகள். பஸ் ஸ்டாப் ல் தமன்னா காத்துகொண்டிருக்கும் போது பின்னாடி ஒலிக்கும் பாடல் காட்சி.


என் வேதனை:
இன்னும் அந்த நிஜ குற்றவாளிகள் தப்பித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் வேதனை..கடவுள் ஏன் தண்டிக்காமல் கார்துகொண்டு இருக்கிறார் என்று இன்னும் புரியவில்லை.


image coutesy:one india