9.13.2008

குசேலன்...ரஜினி...பிரச்சனைகள் மற்றும் ரோபோ/இயந்திரன்

குசேலன் படம் ஓடாத தற்கு காரணம், அது ரஜினி படம் என்று ஒரு hype உண்டாக்கி, கடைசியில் படத்தில் ரஜினி வெறும் 20 நிமிஷம் மற்றும் தோன்றுவது, நம் மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. அந்த படத்தை சுற்றி எத்தனை பிரச்சனைகள்? மீனா விற்கு, தன் பெயர் நயன்தாரா பெயர்க்கு பின் வந்தது பிடிக்கவில்லை. பசுபதி க்கு தன்னை பின்னுக்கு தள்ளியதை பிடிக்காமல் ஆடியோ ரிலீஸ் க்கு வராமல் இருந்தது. ரஜினி டைட்டில் சாங் SPB படாமல் ஷங்கர் மஹாதேவன் பாடியது ரசிகர்களுக்கு பிடிக்க வில்லையாம்.

படம் தோல்வியால் theatre owner'ச ரஜினி இடம் நஷ்டம் கேட்டது. என்று ஒரு ஒரு பிரச்சனை ஆய் கிளம்பி, இப்பொழுது ஒரு வழியாய் எல்லாரும் மறந்து போனார்கள்.
ரஜினி கற்று கொள்ள வேண்டிய பாடம் நிறைய ஞானி குமுதத்தில் பக்கம் பக்கமாக எழுதி தள்ளிவிட்டார். நான் நினைப்பது..ரஜினி க்கு கருத்து உள்ள படம் எடுபடாது. மசாலா படங்களில் தான் சரி வரும்.
எது என்னவோ..படம் பார்த்து வந்தவர்கள் சொல்லுவது..படம் நல்ல இருக்கு..
ஏன் ஓடல பின்ன? ரஜினி தான்..


அடுத்து ரொபோ/இயந்திரன் நினைத்தால் பயமாக இருக்கிறது. ஷங்கர் க்கு உதவி செய்ய சுஜாதா இல்லாதது, ஐஸ்வர்யா ராய் பச்சன் heroine ங்கறது. அவுங்களுக்கு 1.3 கோடி கொட்டி கொடுப்பதுக்கு பதில் ஒரு robo heroine உருவாக்கி நடமாட விட்ருக்கலாம். படத்தோட ஸ்டில் ல ரஜினி ய பாக்க என்னமோ கதிர் பட ஹீரோ மாதிரி பாவமா இருக்கு. பொறுத்து பாக்கலாம்..