12-12-2008 0.50 a.m
இன்னைக்கு இல்லை நேற்று இரண்டு முறை எழுத எண்ணி பின் எழுத வார்த்தைகள் கிடைக்காமல் நிறுத்தினேன். மனதில் எதோ பெரிய/சிறிய விஷயம்/சம்பவங்கள் அடைதிருக்குமாயின், என் பேனா நுனி வழியே இறக்கி விடுவது அல்லது என் விரல் நுனிகளால் கீ-போர்டு வழியாக இறக்கி விடுவது என் வழக்கம். என்னால் என்னை இந்த இரண்டு வகையாலும், முழுமையாக உணர முடிகிறது, என் உள்ளத்துள் உள்ளதும் வெளி கொணர முடிகிறது. ஏனோ பேச்சு வழக்கில், இன்னும் அந்த வெளிகொனறல் வரவில்லை இன்னும். மிகவும் முயற்சித்து கொண்டு வரும் செயல்களில் இதுவும் ஒன்று.
சொல்ல வருவது என்ன வென்றால், அதற்க்கு முன் -என் கைஎழுத்து இன்று அழகாக இருக்கிறது. எழுதும் போதே ரசிக்கிறேன். மற்றொன்று மிகவும் வேகமாக எழுத முடிகிறது-மடை திறந்த வெள்ளம் போல்-சில வரிகளில் கோட்டில் வார்த்தைகள் தங்குகின்றன, சில வரிகளில், வார்த்தைகள் கோட்டில் தொங்கி ஊஞ்சல் ஆடுகிறது-என் மனம் போல். .....
சரி இதுக்கு மேல் இழுக்க விரும்பவில்லை..என் தேர்வு விடைத்தாளில் உள்ளது போல்...
நேற்று மதியம் நான் வலை பூக்களில் தாவி கொண்டிருக்கையில் , ஒரு கட்டுரை படிதேஅன். அது, ஒரு வெளி நாட்டில் வாழும் இந்தியத் தாய், தன் குழந்தைக்கு தன் தாய்மொழியை சொல்லி கொடுக்கிறாள். அந்த கட்டுரை அவள் ஆரம்பிக்கையில், தன் குழந்தைக்கு தாய் மொழி கற்று தர அவள் எடுத்து கொண்ட முயற்சிகள் பற்றியும், அந்த வகுப்புகள் பற்றியும் ரசிக்கும் படியாக எழுதி இருந்தார். அந்த கட்டுரை யை அவர் முடித்த விதம் தான் என்னை ஸ்தம்பிக்க வைத்து. அந்த குழந்தை தாய் மொழியை நன்றாக கற்றுகொண்டதாகவும், தாய் மொழியில்,
" சாவு என்றால் என்ன?"
" நான், நீ, எல்லோரும் சாவோமா?" என்று கேள்வி கேஅட்பதகவும், தன் தாய் மொழியில் அதற்க்கு பதில் சொல்ல தெரியவில்லை என்றும் முடித்திருந்தார் அந்த கட்டுரை யை. இந்த கட்டுரை படித்து, எழுத எண்ணி, ஒன்றும் எழுத முடியாமல் எழுந்தேன்.
மற்றொரு முறை எழுத நினைத்து மிகவும் வருத்தமானது...
இன்று தற்செயலாக செய்திகள் பார்கையில், சட்ட கல்லூரி மாணவர்கள் அடிதடி, என்று பாத்து நிமிடம் அந்த " அடிதடி" யை காட்டினார்கள். உங்கள் மனம் கல் என்றால், நீங்கள் அந்த கோப்பு கட்சியை எதிலாவது தேடி கண்டு பிடித்து பாருங்கள். ஒரு மாணவனை கட்டைகளால், இரும்பால் பாத்து பேர் மாறி மாறி அடிக்கிறார்கள்n, அவன் அசையாமல் படுத்திருக்கிறான்-வலி பொறுக்காமல். ஏறக்குறைய சேத பம்பை அடிப்பது போல தான். அத்தனை அடி அவனுக்கு-அந்த ரோவ்டிகள்/மாணவர்கள்/வக்கீல்களிடம் இருந்து . அதை விட கொடுமை அதை போலீஸ் வேடிக்கை பார்ப்பதும், செமேற மண் அதை படமாக்கி கொண்டிருப்பதும்...பொல்லாத உலகமடா என்று நினைக்க வைத்த கட்சிகள் அவை...
இது போதும், நான் இன்று நிறையா பெசிவிட்டேஅன். என் பேனா மெதுவாக ஓடுகிறது, மூச்சு வாங்கு கிறது போலும், பிறகு சந்திப்போம். ......
1. 20.a.m