நான் பூ படைந்து உனக்கு காத்து கிடக்கையில்
எனக்கு இனிமையாய்
தேனாய் முத்தம் இட்டு என்னுள் ஓடியது
மழை துளி !!!
நீ என்னிடத்தில் தோஷம் இல்லை என்று தெரிந்த பின்
கை கோர்த்தாய்...
ஆனால் எனக்கு எப்போதும் ஜலதோஷத்தை நினைவாக விட்டு போகும் என் மழை என்னிடம்!!!
நான் உன் வாசம் அறிந்து உன்னை அணைக்கும் முன்
மழையின்
மண் வாசனையின் அடிமை
என்பதை தெரிந்து கொள்!!!
மழை சாரலுக்கு பின் வில்லை போல் வளைந்து
வானளாவி பறந்து காட்சி கொடுக்கும் வானவில் லை
காண ஆவல் பூண்டதை விட
உன்னை காண நான் ஆவல் பூண்டது பெரியதல்ல!!!
நான் படிக்காத பரீட்சைக்கு எனக்கு
விடுமுறை வாங்கி கொடுத்த மழை எங்கே ??
நான் படித்த பரீட்சைக்கு என்னை சரியாக எழுத
விடாமல் என்னை ஆட்கொண்ட நீ எங்கே ??
மழை தன் நினைவாக என்னிடத்தில் விட்டு செல்லும் குளிரை
நடுங்கும் உடல் உன்னை தேடி...
மழை யை நாடி அல்ல என்பதை தெரிந்து கொள்...
இன்று நீ என்னை சொல்கிறாய்
மழையில் நினையாதே என்று..........
சரி உனக்காக கேட்கிறேன்
உன் காதல் மழையில் நினைவதற்கு!!!
1 comment:
நல்ல கவிதை. நேரம் கிடைக்கும் பொது என்னுடைய தமிழ் தளத்திற்கு வருகை தரவும்.
http://tamilvaazhga.blogspot.com
Post a Comment