8.01.2008

கருவளையம் தந்த கதா பாத்திரங்கள்

இரவில் கண் விழித்து கொண்டு இருந்தது.
எல்லோரும் எழும்பும் வேளையில் கண் தானே அயர்ந்து தூங்கி போனது.
பகலில் பின் விழித்த பொது ...
கருவளையம் சற்று அழுத்தமாக தான் தெரிகிறது.
கண்கள் வீக்கம் கண்டு இருந்தது.
மண்டை கனத்தது.
ஏழுந்து நடக்க முடியாமல் கால்கள் தள்ளாடின..
தலை சுற்றின..

ஒரு கதையை படித்து முடிக்க எண்ணி கண்கள் விழி திறந்து எனக்கு உதவி செய்தன. கதை முடிந்தும் கதையில் வந்த பாத்திரங்கள் அனைவரும் என்னை துரத்தி வந்து கொண்டே இருக்கின்றன. என் வேலை யை செய்ய விடாமல் துரத்து கின்றன. நான் நம்பிய கதா பாத்திரங்கள் என்னை அதிர்ச்யில் தள்ளியதை என்னால் தாங்க முடியவில்லை. கதையில் இறந்தவர்களும் ஆவி யை போல் துரத்து கிறார்கள்.

கதை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். தீ. ஜானகிராமன் நின் அமிர்தம்
தான் அந்த கதை.
இவரின் மற்றொரு நாவல் மோக முள்..
நான் இன்னும் படிக்கவில்லை.

ஒரு ஒரு புத்தகமாய் படித்து பரணையில் மூட்டை கட்டி போட ஆசை. இங்கே உங்களோடு கருத்துகளையும் பகிரவும் ஆசை. விரைவில்!!!

No comments: