2.21.2008

படிச்சு என்ன கிழிச்சோம்-1


எங்க அபார்ட்மென்ட் ல இருக்கற பசங்க கூட என்ன ஆன்டி ன்னு தான் கூபிடறாங்க. ஆனா இந்த பூ விக்கற பசங்க எவ்ளோ அழகா அக்கா ன்னு கூபிடறாங்க.


பூ விக்கற பய்யன் அல்லது பொண்ணு கிட்ட பேச்சு கொடுத்து இருக்கீங்களா?
அவுங்க எல்லாரும் செய்யற வேலையை அலட்டிகாம செய்யறாங்க ன்னு நான் பார்த்து நிறையா தடவை ஆச்சர்ய பட்டு இருக்கேன்.


இப்போ பப்ளிக் எக்ஸாம் வரபோகுது. 12th க்கு மார்ச் 3 ஆம் தேதியும், 10th க்கு மார்ச் 27 ஆம் தேதியும் எக்ஸாம் தொடங்க போகிறது.


நான் பார்த்த பூ விற்கும் பசங்க 10th படிக்கற பசங்க. அவுங்க படிக்காம இப்படி வேலை செய்யரத பார்த்தா எனக்கு பயமா இருக்கு.

ஏன்னா என்ன அந்த அளவுக்கு பயம் காட்டி இருந்திருக்காங்க என் அம்மா அப்பா.


எக்ஸாம் க்கு மூன்று மாசம் முந்தியே டிவி பரனை க்கு ஷிபிட் ஆயிடுத்து.அப்பயும் நம்ம கில்லாடி இல்ல..விடுவோமா..பக்கத்து வீட்டு டிவி ல இருந்து வர்ற ஆடியோ மட்டும் கேட்டு கிட்டு இருப்பேன்(புக் திறந்தபடி கை யில் இருக்கும்).


அந்த ரெண்டு பசங்க கிட்டயும் நல்ல படிங்க..அலட்சிய படுத்தாதீங்க ன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். பாக்கலாம்.. என்ன மார்க் எடுக்கறாங்க ன்னு.

அன்னைக்கு அப்பாவி போல் அ,ஆ படிச்சோமே அது தான் மனதில் இன்றும் இருக்கும் படிப்பு. மத்தவுங்க ல போல நாமளும் டாக்டர், engineer அகனும்ன்னு படிச்சதுல எனக்கு ஒண்ணும் நினைவு ல இல்ல..உங்களுக்கு?
image from southrange.com

7 comments:

Dhivya said...

உண்மை தான் லாவி....எனக்கும் கூட இந்த மாறி விஷயங்களை கேட்டால் மிகவும் கஷ்டமாக இருக்கும்....ஆனால் என் அம்மா கூட வேலைக்கு செல்ல வேண்டிய தால் கட்டாயத்தின் காரணமாக 8th படிக்கும் சிறுமியை வேலைக்கு வைத்துளார்கள். நம் நாட்டின் இந்த நிலைமை கண்டிப்பாக மாற வேண்டும் என்று கடவுளை பிரார்த்திகறேன்.

Mythreyee said...

Super blog idhu. ivlo naala enakku theriyaama poche. Enakkum uyir yezhuthu mei yezhuthu padichadhu dhaan nyaabagam irukku. Ippa rombavum mosam. Doctor or engineer. classla first varadhukku competition 4th stdla. Competition between students illa, between parents. yen paiyan first mark, illa illa yen paiyan dhaan.....

Lavanya Raj said...

திவ்யா நான் இந்த போஸ்ட் எழுதிய காரணத்தை exact a புரிஞ்சிகிட்டு உன் கருத்தை சொல்லி இருக்க. நீ சொன்னா மாதிரி இந்தியா மாறனும் ன்னா பூ விக்கற பசங்க..வீட்டு வேலை செய்யறவுங்க பசங்க ன்னு எல்லாரும் படிக்கணும்.. பிளஸ் நம்ம இந்தியன்ஸ் தான் எழைகள அடிமை யா நினைக்கறோம். அதுவும் மாறனும். correct a??

Lavanya Raj said...

mythreyee...நீங்க சொன்னது நூறு சதவீதம் கரெக்ட். aana enna panrathu.. intha competitive world la survive aganum nna..போட்டி iruntha thana mudiyum.

Dhivya said...

Correct lavi!உங்களுக்கு ஒரு ஆச்சரியம் என் blog இல் காத்து உள்ளது

Vandana said...

Enakku Indhiya varum pozhuthellam, airportil irundhu veetuku varum paathaiyil, chinna kuzhandhaigal tea kadiyil velai seivathayum, veetu vaasal thelithu kondirupathayum parthal manathil vali erpadum. Pondy Bazaar il, Naidu Hall vasalail ethanai siruvargal poo, hairpin, kerchief virkiraargal. Manathuku kashtamaga irukkum. En magan, "Amma, avargalidam irunthu ethavathu vaangu" enbaan. Intha nilamai eppozhuthu maarum?
I liked your blog very much.
Best Wishes!
Vandana

Saranya Arunprakash said...

namma govt neenga sonnatha konjam kettu irukku pola. 6-14 varaikum kandippa kids padikanum nu rule pottu irukanga la? keep writing more social issues.