2.04.2008

கல்லூரி.....விமர்சனம்


சமீபத்தில் கண்ட திரைப் படங்களை பற்றி விமர்சிக்க எனக்கு ஏன் அப்படி ஒரு ஈடுபாடு என்று புரியவில்லை. ஒரு வேலை..நான் பள்ளியில், கல்லூரியில் நண்பர்களிடம் திரைபடங்களை பற்றி பேசியதினாலும் இப்பொழுது அதுக்கு ஒரு வழியும் இல்லாமல் போனதினாலும் நான் இந்த திரைப்பட விமர்சகி பதவி எடுத்து கொண்டு இருக்கலாம்.

தலைப்பிற்கு வருகையில்..கல்லூரி.....இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றி அடையாமல் போனதற்கு நான் கருதும் காரணம்...கிளைமாக்ஸ் ல் அழுகை வரவில்லை என்ற காரணம் தான்.என்னால் படத்தில் ஒன்ற முடிந்தது. ஆனால் கிளைமாக்ஸ் என்னை காம்ப்ரமைஸ் பண்ணவில்லை என்பது தான் இந்த படத்தின் மைனஸ் என்று நான் கருதுகிறேன்.


என்னை ஈர்த்த காட்சிகள் ...தமன்னா ஹீரோ வை தேடி அவன் வீட்டிற்க்கு வந்து போன காட்சி. தமன்னா மற்றும் ஹீரோ விற்கு காதல் வரும் விதத்தை கட்டிய காட்சிகள். பஸ் ஸ்டாப் ல் தமன்னா காத்துகொண்டிருக்கும் போது பின்னாடி ஒலிக்கும் பாடல் காட்சி.


என் வேதனை:
இன்னும் அந்த நிஜ குற்றவாளிகள் தப்பித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் வேதனை..கடவுள் ஏன் தண்டிக்காமல் கார்துகொண்டு இருக்கிறார் என்று இன்னும் புரியவில்லை.


image coutesy:one india

No comments: